ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பணப்பட்டுவாடா வழக்குகளை ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு அறிவிப்பு

117
rknagarbypollcase

ஜெயலலிதா மறைவுக்கு பின், காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த ஆண்டு  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்கே நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் பதிலால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எப்படி FIR- ஐ ரத்து செய்ய முடியும்  என்று கேள்வி எழுப்பினர். மேலும், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா புகார்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here