“மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்க” – அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்..!

455

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினா்களிடம் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினியின் தாயாா் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், முருகனின் தாயாா் சோமனியம்மாளிடமும், அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவி காணொலி வசதி மூலம் முருகன் பேச அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், இந்த வழக்கில் வெளிநாடுகளில் உள்ளவா்களுடன் பேச அனுமதி கோரப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

எனவே இவா்களை தொலைபேசி வாயிலாக பேச அனுமதிக்கலாம், காணொலி காட்சி வசதி மூலம் பேச அனுமதிக்க முடியாது என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நளினி, முருகன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. விடுதலை செய்ய முடிவெடுத்து விட்டு தற்போது உறவினா்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்பதில் முரண்பாடு உள்ளது.

எனவே நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என கருத்து தெரிவித்தனா். மேலும் இதுதொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனா்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of