மத்திய அரசின் முடிவுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – வைகோ

368

மாநில உரிமைகளை அடியோடு பறித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு நிரந்தர வேட்டு வைக்க நினைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாய்ப்புள்ள தொழில் திட்டங்களுக்கு மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய கட்டுப்பாடுகளை விதித்து நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கி வரும் நிலையில், மாநிலங்களுக்கான உரிமையை பறித்தெடுக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, இனி மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மட்டுமே போதுமானது என்று சுற்றறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார். இது, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை நாசமாக்கி, அபாயம் நிறைந்த நியூட்ரினோ திட்டத்தையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையும் இயங்க வைப்பதற்கான அறிவிப்பு என்று தெரிவித்துள்ள வைகோ, மத்திய அரசின் இந்த முடிவுக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of