அரசின் புதிய அறிவிப்பு.. பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்..?

1935

பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன்காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க முடியாத சூழல் இருந்தது.

இந்நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி முதல், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு பலரும் தங்களது கருத்துகளை கூறி வந்த நிலையில், அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவம்பர் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் முன்னணிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பள்ளிகளை திறக்கலாமா என்று பெற்றோர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இதனால், பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement