ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் முன்விடுதலை செய்ய தீர்மானம்

308

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளின் விளக்கத்தின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.