ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசின் 10 முக்கிய தளர்வுகள்..!

4859

நவம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான 10 தளர்வுகள் பற்றி தற்போது பார்க்கலாம்..

1. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வரையுள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நவம்பர் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2. 50 சதவீத இருக்கைகளுடன், வரும் 10-ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3. பள்ளிக் கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், நவம்பர் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4. சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5. கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் விற்பனை 2-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6. சென்னை கோயம்பேடு பழம், காய்கறி சில்லறை வியாபார கடைகள் வரும் 16-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7. 100 பேர்களுக்கு மிகாமல், அரசியல், மதம், பொழுதுபோக்கு உள்ளிட்ட கூட்டங்களுக்கு, 16-ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

8. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.

9. பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 பேர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement