உள்ளாட்சி தேர்தல் – நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும்

366

தமிழகத்தில் 25 ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 ஒன்றியங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதேபோல் சேலம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 11 ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.