கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்  – தமிழக அமைச்சர்

325

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்  என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். வரும் 15 ஆம்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்துதவறான தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் குணமடைந்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொலைபேசி மூலம் செய்தியாளர்களிடம் உடல்நிலை குறித்து தெரிவித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்  என்று கூறினார்.

வரும் 15 ஆம்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவேன் என்றும் அவர் தெரிவித்தார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு பொறியியல் கல்வி கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of