பெருந்தொற்று பாதிப்பு.. தமிழக அமைச்சர் கவலைக்கிடம்.. அதிர்ச்சி அறிக்கை..

6570

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக, கடந்த 13-ஆம் தேதி அன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அமைச்சருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்றும், நுரையீரலில் 90 சதவீத அளவிற்கு பெருற்தொற்று பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் தொடர் கண்காணிப்பில் அமைச்சர் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரின் உடல்நலம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து விசாரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement