இறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம்..! தமிழக அரசு அனுமதி

125

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. இப்போது 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது இறுதி சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 50 பேர் பங்கேற்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4 கட்ட ஊரடங்கிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்தது. இந்த தளர்வு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்பவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.

முகக் கவசங்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of