பாம்பு கறி விருந்து.. அட்டகாசம் செய்த இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ..

365

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனப்பகுதியில், இளைஞர்கள் பாம்பு கறி சாப்பிடும் வீடியோ, கடந்த சில தினங்களாக வைரலாக பரவி வந்தது.

அந்த வீடியோவில், தோல் உறிக்கப்பட்ட பாம்பை, துண்டு துண்டாக வெட்டி, இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து குழம்பு வைத்து சாப்பிட்டனர்.

இந்த வீடியோ, வனத்துறை மற்றும் காவல்துறை கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த 4 இளைஞர்கள் யார் என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, அந்த வீடியோவை பதிவிட்ட நபரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.