TNPL இறுதிப்போட்டி: டிராகன்ஸை வீழ்த்திய சூப்பர் கில்லீஸ்

372

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதியது.  தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Image result for chepauk super gillies

இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

அதிகபட்ச ரன்களாக சசிதேவ் 44 ரன்னும், முருகன் அஸ்வின் 28 ரன்னும், கவுசிக் காந்தி 22 ரன்னும் எடுத்தனர்.  பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.  தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் களமிறங்கினர்.

இந்த நிலையில், நிஷாந்த் 4 ரன்னிலும், ஜெகதீசன் மற்றும் சதுர்வேத் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்த விக்கெட்டை பறிகொடுத்தனர்.  பின்னர் பேட்டிங் செய்த சுமந்த் ஜெயினும், மோகன் அபினவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

Image result for dindigul dragons

இருவரும் நன்றாக விளையாடி கொண்டிருந்த நிலையில், சுமந்த் ஜெயின் 46 ரன்னில், அலெக்சாண்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அதற்குபின் வந்த வீரர்கள் சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களில் ஆல் அவுட் ஆகினர்.  இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Image result for chepauk super gillies

சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக  பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பெரியசாமி.

சேப்பாக்கம்  மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of