TNPSC குரூப் 4 முறைகேடு – இதுவரை 13 பேர் கைது

179

குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்., நேற்று, ராணிப்பேட்டை மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி, ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கடலூர் மாவட்டம் சிறு கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சீனுவாசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு, 4 நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் பெற்று, முறைகேடாக தேர்வு எழுத உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளதால், குரூப் 4 முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of