TNPSC முறைகேடு : ஜெயக்குமார், ஓம்காந்தனை மீண்டும் காவலில் எடுக்க CBCID மனு

111

TNPSC முறைகேட்டில் தொடர்புடையதாக TNPSC ஊழியர் ஓம்காந்தன் உள்பட 20க்கும் பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடு குறித்த விசாரணையின்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதும் CBCID-க்கு தெரியவந்தது. இது தொடர்பாக, சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக காவலர் சித்தாண்டி உள்பட 20 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டிலும் TNPSC அதிகாரிகளுக்கும், தேர்வர்களுக்கும் இடைத்தரகராகவும், முறைகேட்டை ஒருங்கிணைப்பவராகவும் செயல்பட்டதாக கூறப்படும் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், ஜெயக்குமாரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு CBCID அதிகாரிகள் கோரிக்கை வைத்ததில், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தது. போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என ஜெயக்குமார் கேட்டுக்கொண்ட நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

தற்போது, ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை மீண்டும் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் CBCID அனுமதி கோரியுள்ளது. இதற்கிடையே, மேஜிக் பேனாவை தயாரித்து கொடுத்து,முறைகேட்டில் ஈடுபட உதவியதாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை CBCID போலீசார் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of