குரூப் 4 தேர்வில் முறைகேடு..! 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தண்டனை கொடுத்த TNPSC..!

248

குரூப் 4 முறைகேடு தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், 99 பேரும் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேர் முதல் 100 இடங்களில் வந்துள்ளனர் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் TNPSC தெரிவித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் வேறு நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர் என்றும், இடைத் தரகர்களின் ஆலோசனையின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.

தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது என்றும், தேர்வுக்கூடங்கள், கரூவூலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் ராமேஸ்வரம், கீழக்கரையில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் TNPSC குறிப்பிட்டுள்ளது.

முறைகேட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் TNPSC தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை தவிர வேறு எங்கும் முறைகேடு நடக்கவில்லை என்று கூறியுள்ள TNPSC, இனிவரும் காலங்களில் தவறுகள் நிகழா வண்ணம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையாக தேர்வு எழுதுங்கள் எனவும் TNPSC அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of