இன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – சுறுசுறுப்பு காட்டும் அரசியல் தலைவர்கள்

761

எதிர்வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.

இன்று பிரச்சாரத்திற்கு கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளின் காரசார பிரச்சாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement