மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை

677

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வரும் ஆபரணத்தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாத அளவில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில், தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 9 ரூபாய் அதிகரித்து, 5ஆயிரத்து 208 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 41ஆயிரத்து 664 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 72ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம், வெள்ளியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க எண்ணுவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement