இன்றைய தங்க விலை..! ஏற்றமா..? இறக்கமா..?

773

சென்னையில், தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 99ரூபாய் அதிகரித்து, 5ஆயிரத்து 301 ரூபாய்க்கும், சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து 42ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் கிலோவுக்கு 4ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 4ரூபாய் 60காசுகள் அதிகரித்து, 77 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி  77ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம், வெள்ளியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் வாங்க எண்ணுவோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.