இன்றைய தலைப்பு #செய்திகள் 11.01.2019 #TodayHeadlines

1455

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தலைமை தேர்தல் ஆணையம்…தேர்தல் முன்னோற்பாடுகள் குறித்து இன்று முதல் இரண்டு நாட்கள் ஆலோசனை

பா.ஜ.க இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது…தேர்தல் கூட்டணி, பிரச்சார யுக்திகள் குறித்து முக்கிய ஆலோசனை

மீண்டும் முத்தலாக் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதவை நிறைவேற்ற திட்டம்

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்வு…ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அருண் ஜெட்லி அறிவிப்பு

சி.பி.ஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம்…இடைக்கால சி.பி.ஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம்

சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும்…உத்தரவில் திருத்தம் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்…தமிழக அரசு உத்தரவு

முதலமைச்சர் பழனிசாமி இந்த ஆண்டு இறுதி வரை பதவியில் நீடிப்பதே கேள்விக்குறி…ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கருத்து

சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்…விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

நாகையில் 9 ஆண்டுகளாக இயங்கி வந்த பல்கலைக்கழகத்திற்கு சீல் வைப்பு…சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ராணுவத்துடன் அரசியலை தொடர்பு படுத்தக்கூடாது…ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தல்

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேன மீண்டும் போட்டி…ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of