தூத்துக்குடியில்14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிச் சென்ற கொடூரம்…உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை…சிறப்பு மருத்துவக்குழுவை அமைத்து சிகிச்சை அளிக்க சமூக அமைப்புகள் வலியுறுத்தல்…

சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்…காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு…

புதுக்கோட்டையில் 2ஆயிரம் காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி…முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கின்றனர்…கார்கள், இருசக்கர வாகனங்கள் என லட்சக்கணக்கான ரூபாய் பரிசுமழை…

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 20 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு…ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுவதாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்…இப்படி இருந்தால் அரசு இயந்திரம் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் எனவும் நீதிபதிகள் கேள்வி…

டி.ஜி.பி அந்தஸ்து பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு…
தமிழ்நாடு போலீஸ் அகாடமி திட்ட இயக்குநராக ஜாபர்சேட் நியமனம்…

பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் ஹிட்லர் ஆட்சிதான்…கொல்கத்தா மாநாட்டில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு…

இந்திய அரசை கார்ப்பரேட் நிறுவனமாக்கி விட்டார் பிரதமர் மோடி…
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ள மெகா கூட்டணி…கொல்கத்தா மாநாடு குறித்து பிரதமர் மோடி விமர்சனம்…

சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது…16 நாட்களில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை…

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிமுறைகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு…தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரையில் பிரதமர் மோடிக்கு கட்டாயம் கருப்புக் கொடி காட்டப்படும்…
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டம்…

தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் நாளை முதல் தொடக்கம்…அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு…

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of