9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்…கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…

வேலைநிறுத்தத்தில் பங்கேற்று பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம்…அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய வழக்கு…சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கிடந்ததால் பரபரப்பு…உடல் உறுப்புகளை கைப்பற்றி போலீசார் விசாரணை…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 7 மணிநேரம் விசாரணை…ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் ஓ.பி.எஸ்-சிற்கு தெரியும் என வாக்குமூலம்…

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு…மின்னணு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா பகிர் பேட்டி…உண்மை தெரிந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்…

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது…இந்திய தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டம்…

காங்கிரஸ் நடத்திய திகில் நாடகம்தான் சையது சுஜாவின் பேட்டி…சையதுவின் கொலை குற்றச்சாட்டுக்கும் மத்திய அமைச்சர் மறுப்பு…

சி.பி.ஐ  அதிகாரிகள் 20 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்…இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் உத்தரவு…

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர நடவடிக்கை…முதலமைச்சர் பழனிசாமி உறுதி…

விவசாயத்தை விட்டுவிடுங்கள், விவசாயத்தை நம்பி இனி பயனில்லை…அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் சர்ச்சை…

அரசியலில் ஈடுபட எந்த ஆர்வமும் இல்லை…வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே உச்சக்கட்ட அரசியல் தொடர்பு…நடிகர் அஜித் விளக்கம்…

நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த விடாமல் அரசை தடுப்பது யார்…?சிலை கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னையில் 24 மணிநேரத்தில் நான்கு படுகொலைகள்…தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சம்…

திருவள்ளூரில் மணல் கொள்ளையர்களுக்கு துணைப்போகும் கனிமவள அதிகாரி…நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்…

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை…

கர்நாடகாவில் கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி…கடலில் தத்தளித்த 17 பேர் உயிருடன் மீட்பு…

ஓசூர் அருகே சாலையில் பற்றி எரிந்த சரக்கு லாரி…பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

Advertisement