2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு…10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…

தமிழகத்தில் முதலீடு செய்து நல்ல அறுவடை பெறுங்கள்…முதலீட்டாளர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு…

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி…தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் நிறைவு… கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை நோட்டீஸ்…தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை தொடர உத்தரவு…

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…
மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கைகோள்கள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்…

புதிய சி.பி.ஐ இயக்குநரை தேர்வு செய்வதில் இழுபறி…முடிவு எடுக்கப்படாமல் முடிந்தது தேர்வுக்குழு கூட்டம்…

தங்கையை அரசியலில் இறக்கி ஆழம் பார்க்கிறார் ராகுல் காந்தி…மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து…

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று யார் சொன்னது? மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி…

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலின் இடைநீக்கம் ரத்து…விசாரணை நிலுவையில் உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு…

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டி…9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி…

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of