என் கட்சிகாரராக இருந்தாலும் காட்டிக்கொடுப்பேன்! கமல் பேச்சு!

542

வேலூரில் திமுக சார்பில் அதன் பொருளாளர் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த், புதிய நிதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக துரைமுருகன் இல்லம் மற்றும் அவரது கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

அப்போது 10 லட்சத்துக்கும் மேலாக பணம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பிறகு வேலூர் அருகே உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது பல கோடி ரூபாய் கட்டு கட்டாக சிக்கியது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன்.

பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of