கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் த்ரிஷா கடந்த சில ஆண்டுகளாக இந்தியிலும் நுழைந்து தனது திறமையை காட்டிவருகிறார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன் முறையாக ‘ஹே ஜூட்’ என்கிற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தற்போது ஜீத்து ஜோசப் – மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இந்த படத்திற்கு ‘ராம்’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.
இந்த பூஜையில் கலந்துகொண்ட திரிஷா, “நான் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அங்கே மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற கேள்வியையே அதிகமாக கேட்டிருக்கிறேன். இன்று என்னுடைய அந்த கனவு நனவாகியுள்ளது என்று கூறினார்.