மாமல்லபுரம் புராதான சின்னங்கள்..! இன்று ஒரு நாள் மட்டும் FREE..!

186

இந்தியாவில் உள்ள புராதான நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவம்பர் 19ந் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, கடற்கரை கோவில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.