இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா – விஜயபாஸ்கர்

838

கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று 309 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட் செய்திருந்தார்.

அதில், இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 411-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்தியாவிலேயே தமிழகம் தான் கெரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காத சூழ்நிலையில், தனிநபர் இடைவெளி மட்டுமே மருந்தாக இருப்பதால், பொதுமக்கள் அதனை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement