5-வது கட்டமாக 51 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு

362

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29-ந் தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5-வது கட்டத்துடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைய உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of