இன்றைய தலைப்பு செய்திகள் | 06.01.2019 | TodayHeadlines

798

போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவை கொல்ல நடந்த சதி….

சத்தியம் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்திய முன்னாள் காவல் அதிகாரி……..

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா….?தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார் தமிழக தேர்தல் அதிகாரி….

திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம்…..முக்கிய அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்து…..

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை….உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் விசாரணக்கு வருகிறது….

அ.தி.மு.க சார்பில் திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு….OPS-EPS கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி…..

திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க பயப்படவில்லை…..எத்தனை தேர்தல் வந்தாலும் சந்திப்போம் என முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்….

டி.டி.வி. தினகரனின் பேச்சு நகைப்புக்குரியது…..திருவாரூரில் தி.மு.க வெற்றி பெறுவது உறுதி என ஸ்டாலின் நம்பிக்கை…..

முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் அடுத்தடுத்து சந்திப்பு….அரசியல் கூட்டணி குறித்து பேசவில்லை என இருவரும் விளக்கம்….

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் மனுவும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக விசாரணை…..நாளை மறுதினம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு….

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்….தலைமை செயலகத்தில் தொடக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி….

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படுமா? முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் குழு…..

மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்பு…..தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுகப்படும் என அரசு எச்சரிக்கை….

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிப்படுமா?சிவ் பிரதாப் சுக்லா தலைமையிலான அமைச்சகர்கள் குழு இன்று முக்கிய முடிவு…..

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு…..கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் இம்மாதம் முதல் அமல்…..

மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டி…..நடிகர் பிரகாஷ்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

சென்னை விமானநிலையத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்…..கடத்தலில் ஈடுபட்ட 4 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை….

பபுக் புயலால் தமிழகம், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…..மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை….

விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு…..சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு……

ஹரியானா அரசு அறிவித்த 2 கோடி ரூபாய் பரிசு உண்மையில் கிடைக்குமா?…..வீராங்கனை டிவிட்டரில் விமர்சித்ததால் அமைச்சர் ஆவேசம்…..இந்த மாத இறுதிக்குள் பரிசு கிடைக்கும் என அறிவிப்பு…..

புரோ கபடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பெங்களூரு அணி……இரண்டாவது ஆண்டாக இறுதி போட்டியில் தோற்றதால் குஜராத் ரசிகர்கள் ஏமாற்றம்….