வாகன ஓட்டிகளுக்கு அடுத்த சோதனை.., உயரும் சுங்க கட்டணம்

504

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறி்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளில் மட்டும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மொத்த விலை குறியீட்டின் அடிப்படையிலேயே இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

வரிக்கட்டண் மாற்றம் செய்யப்பட உள்ள சுங்கச்சாவடிகள்,

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் இவைமட்டுமின்றி, சென்னையில் இருந்து பெங்களூர், சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளுக்கும் வரிக்கட்டண் மாற்றியமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of