வாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி

434

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி உள்ளது. இங்கு ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த டிரக் ஒன்று வந்துள்ளது. அப்போது டிரக் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது.

இந்த பிரச்சனை கைக்கலப்பாக மாறிய நிலையில், டிரக் ஓட்டுநர் மற்றும் கிளீனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அதன் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூறும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் அடியாட்கள் போல் நடந்து கொள்வதாகவும், இது போன்ற பிரச்சனைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of