கறி கடைக்கு போனா ஜாக்கிரதை.. – கண்காணிக்க குழு அமைப்பு

1034

தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பு, சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற கடைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of