நாளை உருவாகும் புயல்..! முதலமைச்சர் ஆலோசனை..

450

இலங்கை திரிகோணமலையில் இருந்து சுமார் 530 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக வலுப்பெறுவதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தென்மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாளை மாலை புயல் கரையைக்கடக்கும்போது, சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்யும்போது தென்மாவட்டங்களின் நீர்நிலைகளை கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார்.

Advertisement