நாளை தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

609

2018-19 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள்(மார்ச் 14)நாளைதொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து3,371 மையங்களில் மொத்தம்9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 5500க்கும் மேற்பட்டோர் கொண்ட பறக்கும் படை தேர்வு மையங்களுக்கு படையெடுக்கின்றனர். இதில்,38,176 பேர் தனித்தேர்வர்கள் ஆவர்.

மேலும், இந்தாண்டுமொழிப்பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளன. இதர பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.45 மணி வரை நடைபெற உள்ளன.