நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்..,- இம்ரான் கான்

558

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் முகாம்களையும் மற்றும் அவர்களின் பதுங்கு குழிகளையும் அழித்தனர்.இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் அதிரடியாக விரட்டியடித்தனர். அந்த பதில் தாக்குதலின் போது துரதிஷ்டவசமாக இந்திய விமானி தமிழகத்தின் சிங்கக்குட்டி அபிநந்தன் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டார்.

அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என பல நாடுகள் தொடர்ந்து  பாகிஸ்தானுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of