அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்! சாக்கி சானை முந்திய அக்ஷய்!

697

போர்ப்ஸ் என்ற நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்த ஆண்டும் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் குறித்து தற்போது காண்போம்,

1. பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் பெண்ணாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரின் சம்பளம் வருடத்திற்கு 185 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர் நடத்திய மேடைப் பாடல் நிகழ்ச்சியில் மட்டுமே 266.1 மில்லியன் டாலர் வருமனம் எட்டியது என்பது குறிப்பிடத்தக்து.

2. கைலி காஸ்மெடிக்ஸின் நிறுவனர் கைலி ஜென்னர் என்ற பெண் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். வருடத்திற்கு 170 மில்லியன் சம்பாதிக்கக் கூடியவர்.

3. கன்யே வெஸ்ட் என்னும் ராப் இசைப்படகர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரின் ஒரு வருட சம்பளம் 150 மில்லியன் டாலர்.

4. அடுத்ததாக லியோனெல் மெஸ்ஸி. கால்பந்து வீரரான இவர் வருடத்திற்கு 127 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

5. இசைப்பாடகர் எட் ஷீரன் வருடத்திற்கு 110 மில்லியன் டாலர் சம்பாதித்து ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளார். இசைப்பாடகர் எட் ஷீரன் வருடத்திற்கு 110 மில்லியன் டாலர் சம்பாதித்து ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

6. க்ரிஸ்டியானோ ரொனால்டோ வருடத்திற்கு 109 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இவரும் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. நெய்மர் என்பவரும் கால்பந்து வீரர் தான். இவர் 105 மில்லியன் டாலர் சம்பாதித்து ஏழாவது இடத்தில் உள்ளார்.

8. தி எக்லெஸ் என்ற இசைக் கலைஞர் 100 மில்லியன் டாலர் சம்பாதித்து எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

9. மருத்துவரான ஃபில் மெக்க்ராவ் 95 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார்.

10. மெக்சிகோவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் கேனெலோ அல்வரெஸ் 94 மில்லியன் டாலர் சம்பாதித்து பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

11. ரோஜர் ஃபெடரெர் வருடத்திற்கு 93.4 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் திறன் கொண்டவராக இருக்கும் டென்னிஸ் வீரர்.

12. ஹெளவார்ட் ஸ்டெர்ன் நியூயார்க்கைச் சேர்ந்த நகைச்சுவையாளர், ரேடியோ ஜாக்கியாக கலக்கும் திறன் கொண்டவர். வருடத்திற்கு 93 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

13. ஹாரி பாட்டர் புத்தம் எழுதிய எழுத்தாளர் ஜே.கே ரோவ்லிங் வருடத்திற்கு தன் எழுத்தின் மூலம் 92 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

14. அமெரிக்கன் கால்பந்து வீரரான ரஸ்ஸல் வில்சன் 89.5 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.]

15. ஜுமாஞ்சி படத்தின் மூலம் குழந்தைகளுக்கும் விருப்பமான நடிகராக அறிமுகமானவர் டுவைன் ஜான்சன். இவர் 15-வது இடத்தைப் பிடித்தாலும் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகர் என்ற பெருமை கொண்டவர். 89.4 மில்லியன் டாலர் சம்பாதிக்கக் கூடியவர்.

16. இடத்தை பிடித்தவர் ஆரோன் ரோட்ஜர்ஸ். இவரும் அமெரிக்க கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 89.3 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

17. 89 மில்லியன் டாலர் சம்பாதித்து லெப்ரான் ஜேம்ஸ் 17-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

18. ரேடியோ ஹோஸ்டரான ரஷ் லிம்பாக் வருடத்திற்கு 87 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இவரின் ஷோவைக் கேட்க மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. எல்டோன் ஜான் என்னும் இசைப்பாடகர் 84 மில்லியன் டாலர் சம்பாதித்து 19 இடத்தைப் பெற்றுள்ளார்.

20 வது இடத்தில் பாடகரும், இசைக்கலைஞருமான ஜே – இசட் என்பவர் இடம் பெற்றுள்ளார். 81 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் முதல் உலக பில்லியனரான ஹிப் ஹாப் பாடகராவார்.

21. இந்தியாவிலிருந்து இடம் பெற்ற ஒரே நபர் நடிகர் அக்ஷய் குமார். பாலிவுட்டின் டாப் ஸ்டார் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் வர்ணிக்கப்பட்டுள்ளார். 33-வது இடத்தைப் பிடித்த அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு 5 முதல் 10 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டக்கூடிய திறன் கொண்டவர். இவரின் சம்பளம் வருடத்திற்கு 65 மில்லியன் டாலராகும்.

22. 58 மில்லியன் டாலர் சம்பாதித்து ஜாக்கி சான் 39 வது இடத்தில் இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of