நூடுல்ஸ் பிரியர்களே உஷார்..! ஒரு குடும்பமே பலியான சோகம்..!

3993

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது.

அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் தேதி சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மற்றொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரும் மரணமடைந்துள்ளார்.

கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதால், உயிரிழப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement