உலகில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா வைரசின் எடை எவ்வளவு..?

2363

மாட் பார்க்கர் என்ற கணிதவியல் நிபுணர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து, ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில், உலகில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா வைரசின் எடை, வெறும் 8 மில்லி கிராம் என்று தெரியவந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்த கொரோனா வைரசையும், ஒரு ஸ்பூனில் அடக்கிவிடலாமாம்.

இதுகுறித்து பேசிய மாட் பார்க்கர், கொரோனா வைரஸ் என்பது மனித செல்களை விட, மில்லியன் கணக்கில் சிறியவை என்று தெரிவித்தார்.

பார்ப்பதற்கு மிகவும் சிறிய அளவில் உள்ள இந்த வைரஸ், உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோரை மரணிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement