ஜார்ஜ் குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுக்கிறேன் – விழுப்புரம் எஸ்.பி.

602

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுக்கிறேன் என்று விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார் சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனை அடுத்து, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மாநகர துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.

ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது என்றும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். குட்கா ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் தம்மிடம் தரவில்லை என்றும், ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும்.

ஆனால் அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். சென்னை மாநகர துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளார்.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுளை முற்றிலுமாக மறுப்பதாகவும் சத்தியம் தொலைக்காட்சிக்கு விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of