பாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி!

325

சென்னை அமைந்தகரை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

இமாசலபிரதேச மாநிலம் மனாலிக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்கான பயண டிக்கெட்டுகள் பதிவு செய்து மனாலி சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

மனாலி அருகே உள்ள டோபி என்ற இடத்தில் பாராகிளைடரில் சுற்றுலா பயணிகள் பறப்பது மிகவும் பிரபலமானது. இதனை பார்த்ததும் அரவிந்த், தானும் அந்த பாராகிளைடரில் பறக்க டிக்கெட் பதிவு செய்தார்.

அதன்படி நேற்று அரவிந்த் பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் அதில் பறந்தார். அதை பிரீத்தி தரையில் இருந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் பாராகிளைடரில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரவிந்த் கீழே விழுந்ததில் பாராகிளைடரும் நிலைதடுமாறியது. இதனால் அவசரமாக கீழே இறங்க முயன்றதில் விமானி ஹரு ராமும் காயம் அடைந்தார். அவர் உடனே குல்லு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குல்லு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of