ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதிக்க வேண்டும் – மத்திய அரசு

127

சுற்றுலா தலங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மலைகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், சுற்றுலா தலங்களில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதனை தடுக்கவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதன்படி சுற்றுலா தலங்களில் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்படும் இடங்களுக்கு, சுற்றுலா பயணியர் செல்வதையும், செல்பி எடுப்பதையும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.