உயிருக்குப் போராடிய டால்பினை காப்பாற்றிய சுற்றுலாப் பயணி

257

தென் ஆப்பிரிக்காவில் காயமடைந்து ,கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பினை சுற்றுலா பயணி ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி உள்ளார்.

லெய்னிமோன்ட் கடற்கரையில் பால் கார்டினர் என்ற சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது காயம்பட்ட நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட கார்டினர் தனியாகச் சென்று அதனைக் கடலுக்குள் இழுத்துச் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட காற்றின் வேகத்தில் அவரும் கடலுக்குள் இழுக்கப்பட்டார். ஆனாலும் அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் டால்பினை இழுத்து கடலுக்குள் விட்டார். அவரின் இந்த செயலுக்கு பலரிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.