கேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து..!

396

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கேரளா வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று கேரளா வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் ஐஸ்லேண்டு எக்ஸ்பிரஸ் ரயில் (16525), கொச்சுவேலியிலிருந்து லோக்மானியா செல்லும் கரீப்ரத் எக்ஸ்பிரஸ் ரயில் (12202),

கொச்சுவேலியிலிருந்து போர்பந்தர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (19261), திருவனந்தபுரத்திலிருந்து லோக்மானியா செல்லும் நேத்ரவேதி எக்ஸ்பிரஸ் ரயில் (16346) ஆகிய நான்கு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of