மணல் லாரியே 500 ரூபாய் கொடுக்கரான் உன்னால முடியாதா?

744

மதுரை நான்கு வழி சாலையில் லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து போலீசார் கறாராக பேசி கையூட்டு வாங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலன சரக்கு வாகனங்கள் மதுரை ரிங் ரோடு வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. இதனை பயன்படுத்தி மதுரை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதுரை பாண்டிக் கோவிலுக்கு அருகே சாலையோரத்தில் சரக்கு லாரி பழுதாகி நிற்பதை பார்த்த போக்குவரத்து ரோந்து போலீசார், அங்கு சென்று வழக்கமான வசூல் வேட்டையை நடத்தினர். 100 ரூபாய் லஞ்சத்தை வாங்க மறுத்த போலீசார், கறாராக பேசி 200 ரூபாயை வாங்கினர். மணல் லாரிகளே 500 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது உங்களால் கொடுக்க முடியாத என்று நீண்ட வசனம் பேசிய போலீசார், பணத்தை பெற்ற பிறகே அங்கிருந்த சென்றனர்.

Advertisement