செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஏன் செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

76

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஏன் செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வதுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிமீறல் பற்றி புகார் அளிப்பதற்கான எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து டி.ஜி.பி-யிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஏன் செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.