ஒரே நாளில் ஒரே பகுதியில் 90 ஆயிரம் பேர் போக்குவரத்து விதிமீறல் -காவல்துறை அதிரடி நடவடிக்கை

680

மோட்டார்சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் போலீசிடம் இருந்து தப்பினாலும் அபராதம் விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவுபடி தமிழகம் முழுவதும் ஹெல்மெட் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து போலீசார் தினமும் ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாகவும், கார்களில் பயணிப்பவர்கள் சீட்பெல்ட் அணிவது இல்லை என்றும் ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகே கோர்ட்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் வேட்டையை போலீசார் வேகப்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 4 மாதத்தில் 6 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் புள்ளி விபரம் ஒன்றை கோர்ட்டில் தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் போலீசை பார்த்ததும், மாற்று வழியாக சென்று தப்பி விடுவதும் உண்டு. இதுபோன்று போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்செல்பவர்கள் அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டதாக இனி நிம்மதி பெருமூச்சு விடமுடியாது. வண்டி நம்பரை வைத்து ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் முகவரிக்கு அபராத ரசீதை போலீசார் அனுப்ப தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் இனி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைவருமே போலீசாரின் பிடியில் சிக்குவது உறுதியாகி உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை பிடிப்பதற்காக சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொறுத்தப்பட்டுள்ளன.

இதன்முலம் சிக்னல்களை தாண்டி நிற்பவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள் தாறுமாறாக வாகனம் ஓட்டுபவர்கள் என விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கேமரா காட்சிகள் மூலமாக அபராதம் விதிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது இந்த சம்மனை ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைவருக்கும் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 90 ஆயிரம் பேர் ஒரே நாளில் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of