பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றகையிட முயன்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது

331

போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த நிலுவை தொகை 7ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக பல்லவன்  இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் கூடினர்.

இங்கிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல விடாமல் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.