ஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது

265

கிழக்கு கோதாவரி மாவட்டம் ராவுலபாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாகனத்தில் வந்த ஏழு பேரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், கிருஷ்ண சுரேஷ், ராம்குமார், சுரேந்திரன், தினேஷ்குமார் , முருகன் என்கிற அஜித் மற்றும் கோட்டை சுவாமி என தெரியவந்தது.

கிருஷ்ணா மாவட்டம் பாடேறு பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் 460 கிலோ கஞ்சா 10 செல்போன்கள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of