மகன் மீது ஏறிய ரயில்..! நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்

533

கடலூர் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன்அவரது தாயார் விஜயாவுடன் சென்னை செல்வதற்காக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

அவசரத்தில் முன்பதிவு பெட்டியில் இருவரும் ஏறியதால் முன்பதிவு இல்லா பெட்டிக்கு போகுமாறு டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இறங்கி தனது 65 வயது தாயாருடன் முன்பதிவில்லா பெட்டியை நோக்கி ஓடியுள்ளார் சரவ‌ண‌ன்.

அவர் வேகமாக ஓடி முதலில் ஏறிவிட, தாய் விஜயா வருவதற்குள் ரயில் புறப்பட்டுள்ளது. ரயிலை நிறுத்துமாறு விஜயா கதறி துடித்துள்ளார்.

ரயில் நிலையத்தை தாண்டி சிறிது தூரம் தள்ளி நின்றுள்ளது. தன் மகன் தான் ரயிலை நிறுத்தி விட்டதாக நினைத்து வேகமாக சென்றார் விஜயா. அவர் நினைத்த‌து போலவே ரயிலை நிறுத்தியது மகன் தான். ஆனால் ரயிலை நிறுத்துவதற்கு சர‌ணவன் கொடுத்த விலை அவரது உயிர்.

தாயை விட்டுவிட்டு ரயிலில் ஏறிவிட்டோமே என்ற அதிர்ச்சியில், ஓடிக் கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே குதித்த சரவண‌ன் ரயிலின் சக்கரங்களுக்கு இரையாகியுள்ளார். கண்ணெதிரில் சடலமாக கிடந்த மகனை பார்த்து விஜயா வடித்த கண்ணீர், அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisement