ஹைதரபாத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்.. – பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!

387

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கச்சேகுடா ரயில்நிலையத்தில் இன்று காலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 10 பேர் காயமடைந்தனர்.

சிக்னல் கோளாறால் இரு ரயில்களும் ஒரே தடத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. இரு ரயில்களும் குறைந்த வேகத்தில் வந்ததால், பெரிய அளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

குர்னூல் நகரில் இருந்து ஹூன்ட்ரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும், புறநகர் ரயிலும் இன்றுகாலை 10.30 மணி அளவில் கச்சேகுடா ரயில்நிலையத்துக்கு வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரு ரயில்கள் செல்லவும் ஒரே வழித்தடத்தில் சிக்னல் கிடைத்துள்ளது.

ஆனால் இரு ரயில்களும் ஒரேதடத்தில் வந்ததால், ரயில் பைலட்டால் திடீரென ரயிலை நிறுத்தமுடியவில்லை.இதனால் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. ரயில்நிலையம் என்பதால் இரு ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால்,உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன .

இந்தவிபத்தில் காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு ஓஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்னலில் ஏற்பட்ட கோளாறும், ஒரே தடத்தில் இரு ரயில்கள் வந்தால், எழுப்ப வேண்டிய அபாய ஒலியும் ஒலிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ரயில் இரண்டும் ஒரே தண்டவாளத்தில் சிக்னல் மற்றும் அபாய ஒலி இல்லாமல் நேருக்கு நேர் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது.