ரயில் விபத்தை தடுத்த சிசிடிவி கேமராக்கள்! எப்படி தெரியுமா..?

777

மும்பை- புனே மார்க்கத்தில், மலைப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடரை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது பயனுள்ளது என்பதை நிரூபணமாக்கும் வகையில், சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, இந்த மலைப்பகுதியின் தண்டவாளத்தில் பாறாங்கல் ஒன்று விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்து வந்த பணியாளர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்த தகவலையடுத்து, உடனடியாக ரயில்களை ஆங்காங்கே நிறுத்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மும்பை – கோல்ஹாபூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாகூர்வாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, இடர்பாடுகள் அகற்றப்பட்டதும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதன்காரணமாக, மும்பை மற்றும் புனே மார்க்கத்தில் நிகழவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement